உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை திரும்பிப்பார்க்கும் வகையில் டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்கலாம் அவர்கள் தலை சிறந்த அணு விஞ்ஞானியாகவும், மக்கள் ஜனாதிபதியாகவும், இன்றைய இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் கல்லூரி மாணவ - மாணவிகளின் நடமாடும் பல்கலைக் கழகமாகவும் திகழ்பவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள்.
டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் அறிவியல், விவசாயம், அவர் சார்ந்த ஆராய்ச்சி துறைகள்,கல்லூரி மாணவ -மாணவிகளின் கேள்விகளுக்கு அவர் தரும் தலைசிறந்த பதிலுரைகள் மிகவும் சிறப்புகள் வாய்ந்ததாகும்.
டாக்டர் அப்துல்கலாம் அவர்கள் நான்கு முறை கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர். மது,மாமிசம்,புகைபழக்கம் அறவே அற்றவர்.சிறந்த தலைவர்.
டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் சிந்தனைகளை என்னால் முடிந்தவரை வடிவமைத்துள்ளேன்.இன்றைய இளைஞர்களின் எண்ணங்கள் எழுச்சி பெற உதவும் என்று நம்புகிறேன்.
இப்புத்தகம் வெளிவர காரணமாக இருந்த உலக தமிழ் பல்கலைக் கழக நிறுவனர்/வேந்தர் Dr S.செல்வின் குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்புத்தகத்தை சிறப்பாக வடிவமைத்த உலக தமிழ் பல்கலைக் கழக ஊழியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னோடு படிக்கும் காலங்களில் நான் எழுதிய கவிதை வரிகளை அச்சுக்களாக வடிவமைத்த எனது ஆருயிர் நண்பர் தேவூர் இரா.தேவராஜன் அவர்களுக்கும் எனக்கு உறுதுணையாக இருந்த எனது குடும்பத்தார்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
வாழ்க தமிழ் ! வளர்க தமிழ்!