நிறுவனர்/வேந்தர்
உலகத் தமிழ் பல்கலைக் கழகம் -அமெரிக்கா
டாக்டர் மு.பாண்டியராஜனின் கனவுகள் நிஜமாகட்டும் என்ற சிறந்த நூலை எமது உலகத் தமிழ் பல்கலைக் கழகம் -அமெரிக்கா வெளியீட்டு மகிழ்வதில் பெருமிதம் அடைகிறேன். உலக அரங்கில் இத்தகைய தமிழ் படைப்பாளிகளின் உயர் படைப்புகள் பெருகி தமிழரின் வாழ்வும் தரமும் ஒப்பரிய உயர்ந்த சிந்தனைகளும் இந்தியா சார்ந்த பெருமக்களும் உலகம் தழுவிய தமிழ் பெருமக்களும் உணரவேண்டும் என்ற டாக்டர் கலாமின் பிஞ்சு காலடிகளே இவை !
அப்துல் கலாம் அவர்கள் வாழ்ந்து காட்டிய மாமேதை. திறமையே மூலதனம் என்பதை நிரூபித்த ஒப்பற்ற மாமனிதர் குணமென்னும் குன்றேறி இமயமாய் வாழும் இந்தியாவின் தீபச்சுடர் அப்துல் கலாமின் கனவுகள் நிஜமாக எனது வாழ்த்துக்கள்.
-டாக்டர் செல்வின் குமார்
டாக்டர் S.லாரன்ஸ் M.A.,(Eng) M.A.,(His) M.A.,(Eco) M.Ed., D.Litt.,
" கனவுகள் நிஜமாகட்டும் " புத்தகத்தை படித்து இன்புற்றேன். " நீங்கள் பெரிய மனது கொண்ட புத்திசாலி மனிதர், உங்கள் தலைமையயும் இந்திய குழந்தைகளின் கல்வி குறித்து நீங்கள் காட்டும் அக்கறையையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்" இது அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அவர்கள் 03.03.2006 அன்று அப்துல் கலாம் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி.
ஆம், பெரிய குடும்பத்தில் சாமானியராக பிறந்து உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்து இளைஞர்களின் உணர்வுகளில் நிலைத்து வலிமையான பாரதத்தை உருவாக்க கலாமின் உணர்வுகளை தத்துரூவமாக இந்நூலில் ஆசிரியர் திரு.டாக்டர் மு.பாண்டியராஜன் அவர்கள் வெளிக் கொனர்ந்திருப்பது பாராட்டுக்குரியது.
கலாம் கண்ட கனவு நனவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை என்ற தொனியில் எழுதப்பட்டிருக்கும் இந்நூல் நம் அனைவர் கரங்களிலும் என்றும் இருக்க வேண்டிய அறிய பொக்கிஷமாகும்.
வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்
முனைவர் S.லாரன்ஸ்
திண்டுக்கல் SP.குப்புசாமி
" கனவுகள் நிஜமாகட்டும் "
"காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே"...
என்பது அ.ப.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் வீரம் செறிந்த கவிதை வரிகளுடன் என் வாழ்த்துரையை தொடங்குகிறேன். இந்த நூற்றாண்டு கண்ட ஈடிலா மாமனிதர், அயராத உழப்பாளர், பார் போற்றும் பண்பாளர், இணையிலா அறிவியலாளர் திரு.அப்துல் கலாம் அவர்கள் நம் தாய்த் திருநாட்டின் தவப்புதல்வர். காட்சிக்கு எளியவர், கருத்துக்கு இனியவர். மழலைச் செல்வங்களின் மனத்திலே நிறைந்தவர்.இந்திய நாட்டின் இளைய சமுதாயத்தினை,களையிழந்த நாட்டிலே நின்றேறும் உதய ஞாயிறாக அழைப்பவர்.திடமான மனத்துடன் உரமான கனவு காணச் சொன்னவர்.
"ஓராயிரம் ஆண்டுகள் சோர்ந்து கிடந்த பின் வாராது வந்த மாமணி " யம் - திரு.அப்துல் கலாம் அவர்கள் இராமேஸ்வரதிலே ஓர் எளிய அன்பான குடும்பத்தில் பிறந்து,சராசரி மனிதர்களுடன் வளர்ந்து,அவர் தம் துன்பங்கள் அறிந்து,அவர்தம் துயர் தீர்க்க ஒப்பற்ற மனிதராக உயர்ந்தவர்.மனித நேயமும்,மாத நல்லுணர்வும்அவருடய இரு கண்களாயின.அறிவியல் அவரது இதயத்துடிபாயிற்று.அயராத உழைப்பும் சலியாத மன உறுதியும்,அடுத்தடுத்த முயற்சிகளும் அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தன. அவர்தம் இளவயதுக் கனவான விண்வெளிச் சாதனைகள் சாகா வரம் பெற்றன. சரிதிரமாயின. பாரதத்தின் முதல்குடிமகனின் வெற்றி அறிவியல் துறையில் மட்டுமல்லாது பாரத சமுதாயத்திற்கும் என நீள்கிறது.நாட்டின் ஏழை எளிய மக்களின் அன்றாட வாழ்கைநிலை முதலாக அரசியல்,பொருளாதாரம்,சமூக ஏற்றத்தாழ்வு, கல்வி, தொலைநோக்குப் பார்வை விரிகிறது.
"அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு!
என்ற பாவேந்தரின் சிந்தனை நினைவு கொள்ளுதற்குரியது.
நம் தலையை உள்வனத் திறமையற்றவனுக்குப் பயிற்சியும். திறமைசாலிக்கு மேலும் திறமைகள் படித்தவர்களுக்குக் கூடுதல்சவாலான சூழலும் உருவாக்கித் தரப்பட்டால் இந்தியர்கள் தம் இலக்குகளைச் சென்றடைவர். இத்தகைய மனித வள அணி வாகுப்பே நம்மைப் பொருளாதாரச் சாதனைகளுக்கு இட்டுச் செல்லும். தலைவர் முயற்சிகளுடன், தொழில் துறை, அரசாங்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு நிறுவனங்கள் ஆகிய தங்க முக்கோணம் உண்மையில் நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் ஆகிறது. சிறு தொழில் துறைகள் ஊக்குவிக்கப் படவேண்டும். பொதுத்துறை நிறுவனங்களுடன் பன்னாட்டுக் கம்பெனிகளும் தங்களது தரத்தினையும் ஏற்றுமதியும் மேம்படுத்தப் பாடுபட வேண்டும்.
அடுத்த இருபது ஆண்டுகளில் இந்தியா குறைந்த பட்சம் 36 கோடி டன்கள் தானிய உற்பத்திக்கான பணி இலக்கினை வகுக்க வேண்டும். இது உள்நாட்டுத் தேவை போக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அதிகமானது. தகவல் தொழில் நுட்பவியல்.
இந்தியாவின் மென்பொருள் துறையில் உயர்மட்ட அறிவாற்றல் வளம் உள்ளது.செல்வ வளம் பெருக்கவும் உதவுகிறது. கல்வியை தொலைதூரத்திற்க்குக் கொண்டு செல்ல உதவும் பேராற்றல் சாதனமும் இதுவே.தகவல் தொழில் நுட்பத்தினை ஆக்கபூர்வமாகவும் கையாண்டால், இந்தியக் கல்வியும், திறமையும் சார்ந்த அமைப்பு முறைகளை இன்னும் பத்தாண்டுகளில் காணமுடியும்.
அடுத்து தேசப்பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுகிறது.பிரதான பீரங்கிகள், இலகுரக ஏவுகணைகள் போன்றவற்றில் நாம் தன்னிறைவு அடைய முயல வேண்டும்.
இவை தவிர ஒரு வளர்ந்த நாடு என்கிற வாஞ்சையுடன் கூடிய குறிக்கோள் நோக்கிப் பீடுநடை போட இன்றைய நம் பனிமுறைகளை மாற்றுதுதல் வேண்டும்.மேலும் ஒரே இடத்தில் கொட்டிக் கிடக்கும் அதிகாரங்களால் உறைந்து விட்ட சில மனங்களையும் நாம் மாற்ற வேண்டியது உடனடித்தேவை. தாராளமயமாக்கப்பட்ட எளிமையான செயல்முறைகளுடன் கூடிய தனியாரின் பங்களிப்பும் முக்கியமானது.ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையால் பயன் பெருகும். புதுமைகள் விளையும் " இந்தியா 2020 " ஆம் ஆண்டிற்குள் ஒரு வளர்ந்த நாடாக மாறும். இந்த உருமாற்றத்திற்கு நூறு கோடிக்கும் மேற்பட்ட நம் நாட்டு மக்களே ஆதார வளம் ஆகும்.
இப்படி வலிமையான வளமான இந்தியாவைக் கனவு காணும் கலாம் அவர்களின் தலைமையில் புது யுகம் மலரட்டும். "இப்புவி வளம் காக்க இளைய கைகள் இணையட்டும் " இதோ கலாமின் வார்த்தைகள்.
"இந்த மாபெரும் நாட்டில் நான்
நன்றாகவே இருக்கிறேன்
இதன் கோடிக் கணக்கான
சிறுவர் சிறுமிகளைப் பார்க்கிறேன் எண்ணக்குள்ளிருந்து அவர்கள் வற்றாத புனிதத்தை முகந்து இறைக்கிற மாதிரி ".
திண்டுக்கல் SP.குப்புசாமி