தங்களை வரவேற்பதில் மகிழ்சியடைகிறேன். தங்களது கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். டாக்டர் மு.பாண்டியராஜன்.

Thursday, January 20, 2011

வாழ்த்து மடல்



டாக்டர் APJ. அப்துல் கலாம் அவர்களுக்கு எனது வாழ்த்து மடல்

இராமனின் சோதரனே - குழந்தை
இயேசுவின் தீபச்சுடரே எங்கள்
இஸ்லாத்தின் இளையவரே ...


இராமேஸ்வரத்தில் பிறந்து கடைக்குட்டியாய் இருந்து
இன்று வானுயர்ந்து நிற்க்கும்
இந்தியக்குடிமகனே ....


இன்று நான் காணும் இந்தியா புதியது
இல்லற வாழ்வுதனை துறந்து ....


இன்று இந்தியத்திருநாட்டை காக்கும்
இமயத்தின் சிகரமே !....


இன்முக மலர்ச்சியோடும்,
இன்ப துன்பங்களையும் மறந்து
இந்தியாவை வழி நடத்தும் வழிகாட்டியே !...


இனிய மழலைப் பருவதிலே
இராமேஸ்வரந்தனில் கல்வி பயின்று
இனிய பட்டந்தனை திருசியில் வென்று ...


இன்று இரவு நேரத்து மதியாய் -எங்கள்
இந்தியரின் மனதில் வாழும் தமிழனே ...


இன்முக நட்புடன் பழகும்
இதயம் கொண்டு வாழும் எங்கள் இமையே ...


இளமையிலே துறவு பூண்டு
இன்றும் கடைப்பிடித்து வாழும்
இன்னுமொரு இதயமே ...


இயற்கைவளம் கொழிக்கும்
இராமேஸ்வரதின் சங்கத்தமிழே ...


இளைஞர்களுக்கு உமது களஞ்சியம்
"இந்தியா 2020" இதயத்துடிப்பாய் இருக்கட்டும் .....


இனி இமயம் முதல் குமரிவரை
இனி உன் புகழ் தாம் ...


இனிய உன் உள்ளம் உயர்ந்திருக்க
இணைக்கும் நல்லுறவாய் உயர்த்திருக்க....


இந்தியப்பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம்
இனம்புரியா அன்புகொண்டு
இப்பூவுலகில் பவனிவரும்
ஆரூர் தேரே ....


இறுகிக்கிடக்கும் அரசியலில்
இந்திய அணு (விஞ்)ஞானியாய் இருந்து
இரும்புக்கரம் கொண்டு வழிநடத்தும் வாழ்வே ....


இத்துணைத் தடைகளையும்
இனிதே தகத்தெறிந்து உம்
இதழோரம் புன்சிரிப்பும்
இமையோரம் வெற்றிக்களிப்பும் தெரிகிறது .....


இனிய
இந்தியத்திருநாட்டை
இனம் காட்டும் சூரியனின் இளங்கதிரே.....


இதோ எங்களிளமையை உமக்களிக்கிறோம் ....
இங்குள்ள அனைவரையும் -உன்
இமைகளில் வைத்துக்காப்பாயாக .....


இந்தியத்திருநாட்டை காப்பாற்ற
இரவு பகல் பாராமல் உழைக்க வந்த
இன்னுமொரு நேருவே....


இத்தகு ஆளுமை உமக்குண்டு இருவேறு துருவமாய் இருந்து
இன்று வானுயர்ந்து நிற்கும் இராஜகோபுரமே ......


இனியவனே நீ இன்னுமொரு வானம்
இன்று அனைவர் மனதிலும்
இன்பம் தரும் மழையாய் வாழ்கிறாய் ....


இன்று நிமிர்ந்து நிற்க்கும்
இந்தியா....
இளம்பிறையே உனதே ....


இதைக்கண்டவுடன் உமது
இனிய மொழிதனை இங்கனுப்ப மாட்டாயா?


இளம்பிடி வெறுத்து
இன்னுமொரு விவேகானந்தராய் காட்சிதரும்
இன்பக் காவியமே !....


இருபதாம் நூற்றாண்டின்
இணையற்ற எங்களின்
இதயமே ....


இன்னல்கள் பல தாங்கி
இன்று தமிழகத்தில் "செல்வி ஜெயலலிதா "
இனியதொரு அமைந்த ஆட்சி...


இவரது தனியாத ஆசை
இந்தியாவின் தன்னிகரில்லா மாநிலம் தமிழகம் என்று
இன்சொல்லால் இனிக்க வைத்தீர்...


இன்னுமொரு காவியத்தலைவன்
இவரோர் ஆலமரம்தான்
இன்று அண்ணா அறிவாலயத்தில் அறிவுச்சுடராய் .....


இவருனக்குத் தீட்டிய கவிதை கண்டு
இன்பமாய் நீ
இரட்டை வியப்பில் திளைத்து இருந்தாய் .


இவர்களின் அன்பு -உனக்கு
இயல்பாக நிலைத்திருக்கும் இது
இளவேனில் கால பந்தமே .


இன்னுமொரு நூற்றாண்டு நீ இருந்திட
இளைய தலைமுறையை நன்கு வழிநடத்திட,
இறையை இறைஞ்சுகிறேன்.


இறையன்பின் ஆழ் சிந்தனையுடய
இராமலிங்க வள்ளலாரின்
இனிய தீபச்சுடரே !


இந்தியச் சட்டந்தனை மதித்து
இன்று பாதிக்கப்பட்ட
இடந்த்தனிற் சென்று நிவாரணமளித்திட்டாய்...


இத்தகையச் சேவைதனை -நீ
இங்கு அரும்பணியாய் செய்திட்ட
இறையருளே ....


இப்பூவுலகம் இதுவரை ஒரு
இயக்கமாய்ச் சுழலவில்லையே ....


இறையருளுடய இளவழகனே !
இன்றும்,என்றும் வயது பதினாறு
இவர் தொண்டிற்க்கு இன்னும் வயதாகவில்லை
இன்றும் இளமையே .....


இந்திய மண்ணில் ஆங்கிலேயரை
இனங்கண்டு எதிர்த்திட்ட முதல்
இந்திய மாமன்னர் மருது சகோதரர்கள்


இன்னாட்சி செய்திட்ட பகுதியில்
இன்று நீ மலர்ந்த
இராமேஸ்வரம் .....


இந்திய தேசத்தை காப்பாற்ற
இளமையிலேயே சிறைசென்ற இளவல் நம் பாரதியே !
இவர் இயற்றிய கவிகண்டு


இயக்கமாய் வளர்ந்தது இளைஞர் கூட்டம்
இப்போது இக்கலை உனக்குமுண்டு
இளையவனே .....


இளம்பிடி துறந்து
இந்திய சுத்ந்திரதாகம் தனித்த
இன வேற்றுமையை வெறுத்து ....


இரத்தினமாய் வாழ்ந்திட்ட,
இராமநாதபுரம் ஜில்லா பசும்பொன் கண்ட தெய்வ திருமகன்
இன்றும் தெய்வமாய் .......


இன்று ..
இவர்களின் பூரண ஆசியைப் பெற்ற
இளவலும் நீயே ....


இந்தியப் பண்பாட்டைச் சுமந்து இன்றும் நீ
இன்பத் தமிழில் "கீதாயை "எடுத்துரைத்து
இவர் செந்தமிழுக்கே பெருமை சேர்த்த


இன்னுமொரு வா.வே.சுவே..!
இன்சுவையுடன் கூடிய
இன்பத் தமிழை -உன்


இனிய உரைதனில் கண்டேன்
இந்தியப் பண்பாட்டை கடற்கடந்து
இன்பக் காவியம் படைத்த
இன்னுமொரு விவேகானந்தரே !


இந்துமத சிறப்பினை "அர்த்தமுள்ள
இந்து மதம் "படைத்த
இன்னொரு கண்ணதாசனே ....


இந்நாலும்,
இளமைக் கோலமாய் நீ வாழ
இறைவன் அருள் மழை பொழிய

இன்றுபோல் நீ இன்மொழி பேசி
இனிவரும் நாளில்
இன்பங்கள் அனைத்தும்

இறைவனிடத்தில் பெற்றிட என்
இதய பூர்வமான
இனிய நல் வழ்துக்கள்....
- டாக்டர் மு.பாண்டியராஜன்